அடியே குரங்கி எங்கடி போன
அடியே குரங்கி எங்கடி போன? உன்ன எவ்வளவு நேரம் தேடறது?
என்னயக்கா, கொரங்க ஏந் தேடறீங்க? இங்கிருந்து நாலு தெருவு தள்ளியிருக்கற புளிய மரத்திலதான் ஒரு கொரங்கு குடும்பமே இருக்குது.
அடி போடி வெவரங்கெட்ட வெள்ளச்சி. நான் எம் மொதலாளி கொழந்தை குரங்கியைத்தைத் தேடறன்டி.
உம் மொதலாளி மக பேரு குரங்கியா? ஆமாம்டி. அவுங்க பீகார்க்காரங்க. இங்க பெரிய கடை வச்சிருக்காங்க. அவுங்க பொண்ணுப் பேருதான் குரங்கி. நாலு வயசு புள்ள.
என்னயக்க அநியாயம் பெத்த பிள்ளைக்குப் போயி குரங்கின்னு பேரு வச்சிருக்காங்க.
அடியே வெள்ளச்சி. இது தமிழ்க் 'குரங்கி' இல்லடி. இந்திக் 'குரங்கி'டி
எந்தக் குரங்கியா இருந்தாலும் நம்ம சென்னையில ஒரு நாலு வயசு பொண் கொழந்தையைக் 'குரங்கி'ன்னு கூப்பட்டா நம்ம சனங்க சிரிக்கமாட்டாங்க.
சிரிக்கமாட்டங்கடி. எங்க குரங்கிச் செல்லம் சேட்டுப் புள்ளடி. செவச்செவனு அழகா தேவதை மாதிரி இருப்படி.
சரி எப்பிடி அழகுக் குரங்கி காணாம போனா?
மொதலாளியும் மொதலாளியம்மாவும் அவசரமா எங்கயோ போயிட்டு ஒரு மணி நேரத்தில வீடு திரும்பறதாச் சொல்லிட்டுப் போனாங்க. நான் வீட்டில பாத்திரங்களக் கழுவிட்டு இருக்கறபோது எங்க குரங்கிச் செல்லாம் எனக்குத் தெரியாம வெளிய போனா. நானுந் தேடறேன். காணம்.
எங்க போயிருக்கப் போறா? பக்கத்துத் தெருவுல நாலாவது வீட்டில ஒரு இந்திக்காரக் குடும்பம் இருக்குது. அங்கதான் குரங்கி ஓடிருப்பா. போயிப் பாருயக்கா
நீ சொல்லறதும் நல்ல யோசனைதான். அவுங்க இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவாங்க. நாம் போயி குரங்கியக் கூட்டிட்டு வர்றேன்.
■■■■◆■■■■■■■■■■■■■■■■◆■◆◆◆◆
Kurangi = deer