வண்ணத்துப்பூச்சி

ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சசி
அந்த பூஞ்சோலையில்
பூப்பூவாய்த் தேடி அமர்ந்து
தேனுண்டு கூடவே
அப்பூக்களோடு நேசமும் வளர்த்துக்கொண்டு
நாளெல்லாம் குதுகூலமாய் இருக்க
எங்கிருந்தோ வந்த சிறுவன் ஒருவன்
பதுங்கிவந்து அந்த வண்ணத்துப்பூச்சியை
கையால் பிடித்துவிட்டான்-பாவம் அந்த பூச்சி
சிறகை சிறுவன் கையால் மடிக்க
துடித்தது, அவன் அதை ஒரு தீப்பெட்டிக்குள்
அடைத்துவிட பார்க்கையில், நான் முந்திக்கொண்டேன்
அவனிடம் சென்றேன் .....' ஏன், தம்பி இப்படி
அப்பூச்சியை பெட்டியில் அடைக்கப்பார்கிறாய் '
என்று கேட்க, சிறுவன் சொன்னான் ..........
'தாத்தா, பெட்டியில் அடைந்துவிட்டால்
பூச்சி இறந்துவிடும், பின் அதை நான்
ஏன் விஞான நோட்டுப்புத்தகத்தில் ஒட்டிவைத்து
அதன் உடலுறுப்பைகளை பென்சிலில் காட்டி
நாளை விஞான 'ப்ராக்டிகலில்' முதல் எண் எடுப்பேன் என்றான்
இது தவறு தம்பி.... அந்த பூச்சியிடம் அதன்
சுறுசுறுப்பைக் கற்றுக்கொள், அதன் நட்பு நேயம்
அறிந்துகொள், உயிருள்ள ஜீவனை விதைத்தல் தவறு
விட்டுவிடு அந்த வண்ணத்துப்பூச்சியை அதன் போக்கில்
நல்லபிள்ளை அல்லவா நீ' என்றேன்................
சிறுவன் என்ன நினைத்தானோ.... தெரியலை......
தீப்பெட்டியில் அடைத்துவைத்த பூச்சிக்கு
விடுதலை தந்தான்........ மயக்கத்தில் இருந்த அது
கொஞ்சம் சுதாரித்து பின்னே பறந்துபோனது

ஏன் மனமும் நிறைவடைந்தது.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Sep-18, 4:38 pm)
பார்வை : 89

மேலே