ஓவியங்களுக்கான உயிரோட்டம்

ஒரு ரோஜாவை நீட்டி
எந்த மதம் வேண்டும் என்று சொல்
அந்த மதமாகவே மாறி
உன் உயிராய் வருகிறேன் என்று சொல்லி விட்டு
சென்றாய்

நீ கண்ணணாகவும் வேண்டாம்
கிறிஸ்தவனாகவும்
வேண்டாம்

காலம் முழுதும்
என் காதலனாக வா அது போதும்...

Tom and Jerry போல நம் காதலை வளர்ப்போம்
ஆனால் நினைவிருக்கட்டும்
என்றும் உன் Jerry நான் தான் என்று


கவலைப்படாதே என் காதல் கனவா...
உன் சோகக்கூட்டைக் கூட
சந்தோஷ சங்கீதமாய் மாற்றும் காதல் தேவதை நானடா...

உன் குடைக்குள்
என்றும் என் காதலே
உன் தோளில்
என்றும் என் கூந்தலே...

இதை எல்லாம்
தைரியமாக சொல்லிவிட்டேன்...
அவனிடம் இல்லை...
ஒரு நதியில் சென்ற
நிலவை பார்த்து...😍

எழுதியவர் : தாரா (1-Oct-18, 9:10 pm)
சேர்த்தது : தாரா
பார்வை : 113

மேலே