வழி இனி ஏது வாழ்விலே

எதனைக் கொண்டு
என் காதலை
எடை போட்டு பார்க்கிறாய்!
விடை ஏதும் சொல்லாது
வேகமாய் நடை போட்டு
செல்கிறாய்!
கூவும் குயிலே!
அகவும் மயிலே!
துணை நீயே என்று வந்தேனே
தனியாய் எனை
நிறுத்திச் சென்றாயே!
வேண்டுது மனமே
உன்னை எண்ணி எண்ணி
ஏங்குது தினமே!
தீதது வருமோ?தீயாய்
என் நெஞ்சை சுடுமோ?
எனக்கு மட்டும் இந்த காதல்
சாபமோ?
கண்ணில் உன்னை
வைத்தேனே!
கனவாய் நீயும் போனாயே!
நெஞ்சில் உன்னை
சுமந்தேனே!நெடுவாளால்
அதனை கிழித்தாயே!
உயிரது இல்லை என்னுடலிலே!
வழி இனி ஏது வாழ்விலே!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (2-Oct-18, 1:14 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே