பெண்மையின் ஒரு சாளரம்

பாலைவன பூமியில்
கிடந்த சிறு விதையை
உன் நேர்த்தியினால்
செம்மண்ணில் செழுமையாய் செலுத்தினாய்....
மலட்டு விதை என எண்ணியவை
மலர்ந்து மாரு தூக்கி எழுந்து
வீறு கொண்டு வீர நடை போடுகிறது ...
எங்கெங்கோ தேடிய தேடல்
இங்கே தான் விடையென தெரியாமல்
மனச் சிறகு பல தூரம் பறந்து
மனசு ஒடிஞ்சும் திரும்பியது...
கற்பனை காட்சிகள்
கண்முன்னே விரிய
கலங்கிய கண்களே
ஆனந்தத்தின் விடை ...
இனி யொரு நொடியும்
பிரியா உனை..
இதுவே என்
பிரார்த்தனை வினை ..
சின்ன சின்ன பூ மலருகிறது
தொடர்ந்து பயணப்பட்டால்
பூமரம் நிச்சயம் பூத்து குலுங்கும் ..
அதுவரை இப்பூவின்
மகரந்தம் என் மடியில்
பத்திரமாய் பயணிக்கும் ...
என்னுள் பாதி
என்னவளாய் மீதி
தொடரும் பல வீதி
இதுவே விதி ...