காதல் காதல் காதல்

காதல் என்பது இரு இதயத்தை
இணைத்துக் கட்டும் தங்க நூல் போன்று
வலிமையானது;

நாம் எங்கிருந்தாலும் நெஞ்சில்
காதல் பெருகி தொடர்ந்து
வளரும் உணர்வது;

உறங்கும் போது கனவில் வந்து
விழிக்கும்போது நெஞ்சில் புகுந்து
அமர்ந்து கொள்வது;

பருவம் வந்த போதும்
தக்க வயது (21) வரும் வரை
பொறுமையாகக் காத்திருப்பது

காதல்! காதல்! காதல்!

காதல்! காதல்! காதல்!

காத லென்ப(து) இரண்டித யங்களை
சோதனைக் குப்பின் இணைத்துக் கட்டும்
தங்க நூலைப் போன்றவோர், வலிமை
பொங்கவும் உண்மை அன்பு கொண்டதே! 1

நாம்எங்கி ருந்தாலும் நெஞ்சில் பெருகி
தொடர்ந்து வளரும் உணர்வது காதல்!
உறங்கும் போது கனவிலும், விழிக்கும்
போது நெஞ்சிலும் புகுந்தமர்ந்து கொள்வதே! 2

பருவ வயதுவரும் போகுமே தகுந்த
வயது (21) வரும்வரை பொறுமை கொண்டு
காத்திருக் கும்மன நிறைவுத் தன்மையே
இனிய காதல்! காதல்! காதலே! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-18, 3:56 pm)
பார்வை : 89

மேலே