கதைக் கதையாம், காரணமாம்
எப்போதும் போலான அன்றைய பயணமொன்றில்
முப்பொழுதும் நினைவில் வாழும் ஒரு நிமிடக் காதல்...
இரண்டு இருக்கைகளுக்கு முன்னமர்ந்த
இளவேனில் அவள்,
ஓடும் வண்டிச் சாளரத்தின் வெளியே மிதந்து வந்த அவளது மேலாடை எனைத் தழுவ,
இதமாய் தழுவிய தென்றலை விலக்கி,
உடல் முழுவதும் தணல் கூட்டும் விளிம்பில்,
மகரந்தத் தூள்களின் பருவராகம் இசையோடியது...
சில்லாகித்துத் திரும்பிய அந்த மேலாடையப் பற்றி
என்றாவது, ஏதாவது எழுதிடுவோம் என்ற எண்ணத்தில்
நினைவோடு நிழல் தங்கும் விதமாக,
அதன் நூலினை எடுத்திட, எடுத்திட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவிய நிலையில்,
இன்றைய ஏமாற்றம் எனக்குப் புதிதல்ல...!