அவள் நிறம் கருப்பு
வண்ணங்கள் ஏழு எழில் மிகு
வானவில்லில், ஆயின் கருமை நிறம் மட்டும்
இடம்பெறாததேனோ என்று யோசிக்கையில்
அந்நிறத்தை தனக்கே தனி நிறமாய்
அந்த இறைவன் ஏற்றுக்கொண்டான் என்ற
விடை என் மனதில் தோன்றியது !
கீதையை நமக்களித்த கண்ணன் நிறம் கருமை;
நீல வண்ணன், நீலமேகம் என்றெல்லாம்
அவனுக்கு இதனால் பல பெயர்களுமுண்டு
அத்தை மகளே, ரத்தினம், என் காதலி நீயும்,
கருப்புதான் நான் விரும்பும் நிறம் கருப்பு
அடியே , நம் ஆத்தங்கரை அம்மன் சிலையும் கறுப்பே
கரிய உன் முகத்தில் அந்த அம்மன் களை வீசுதடி
என் கண்ணம்மா.... உன் மூக்கின் வைர மூக்குத்தி
வீசும் ஒளியில் நீ எனக்கு சக்தியாய் காட்சி
தருகிறாயடி எந்தன் கருமாணிக்கமே.