தவிப்பு

மனமிருந்தால்
மார்க்கமுண்டு
என்பதை
மறந்து
பணமிருந்தால்
மார்க்கமுண்டு
என்று நினைத்து
இரை
தேடிச் செல்லும்
பறவையாய்
அயல் நாடு
சென்று
பணயக் கைதி போல
பணக் கைதிகளாகி
முதலாளி ராஜாக்களுக்கு
அடிமைத்தொழில் செய்து
விடுப்பு எடுக்கா வேலையாளாக
வேதனை ஏராளம்
மனப்புண்கள் தாராளம்
நோய் வந்தாலும்
நொந்து கொண்டு தான்
வேலை செய்யனும்
அவசரத்துக்கு உதவ
எந்த நாதியும் இல்லை
எரிமலைக்குமுறல்
மனதிற்குள்
எமனின்
பாசக்கயிறு
எப்போதும் விழலாம்
பணத்திற்கு
வந்து
பாசத்தை
தொலைவில் வைத்த
வேதனை மனிதன்

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (12-Oct-18, 11:41 am)
சேர்த்தது : settu matharsha
Tanglish : thavippu
பார்வை : 233

மேலே