உன்னால் முடியும்

தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை
தோல்வியை கண்டு நீ துவண்டு விடாதே
தோல்வியும் ஒருநாள் வெற்றியாகும்
நீ மறந்துவிடாதே
வாய்ப்புகள் வந்து வாயில் கதவை தட்டும்
என்று இருந்து விடாதே
முயற்சி செய்தால் முடியாதது இல்லை
நீ மறந்து விடாதே
வெற்றி என்பதும் தோல்வி என்பதும்
நீ செய்யும் செயலில் உள்ளதடா
உண்மை என்பதும் பொய் என்பதும்
நீ சொல்லும் சொல்லில் உள்ளதடா
கனவும் ஒரு நாள் நினைவாகும்
கனவு காண்பதை நிறுத்தாதே
யுத்தம் செய் புது யுகம் படைக்க
சத்தம் செய் சாதித்தோம் என்று
தவறுகள் செய்தால் மன்னித்து விடு
இதை விட வேறு தண்டனை இல்லை
நீ என்பதும் நான் என்பதும்
நாம் என்பதால் வெற்றி உண்டு தோல்வி இல்லை
அநீதி கண்டு அக்கினியாய் எழுந்திடு
அகிலம் உன்னை போற்றும்
விழுந்தால் விதையாய் இரு
எழுந்தால் விருச்சமாய் ஏழு
தோழா உன்னால் முடியும்
- கோவை உதயன்