நீ புறக்கணித்த மழைத்துளிகள்

மழை பூத்தநாட்களில்
குடையோரக் கவிதையாய் நீ...
நீ புறக்கணித்த மழைதுளிகள் மட்டும்
நதியோடு நீராகி கடலிடமே சங்கமித்தது...
என்றோ ஒருநாள்...
கடற்கரை மணலோடு
உன் கால்கள் கதைபேச...
இரை நோக்கி பறக்கும் பறவையாய்....
அது கடலலையின் நுரையாகி
மீண்டும் உன்னையே சரணடைந்தது...
பேரதிசயம் கண்ட
பெருமிதம் போதும் அதற்கு...
உன் கால்களில்
ஈரம்காயும் வரை
அதன் காலம் வாழும்.....

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-18, 8:48 pm)
சேர்த்தது : மணிகண்டன்
பார்வை : 68

மேலே