அன்பின் ஊற்றே அம்மா

அப்பனில்லா பிள்ளை
யெனக்கு எல்லாமே
நீ தானே
என் ஆத்தா......

பாவிமகன் எனைவளர்க்க
படாதபாடு பட்ட - காடு
கழனியெல்லாம் அலைஞ்சு
திரிஞ்சு உழைச்ச......

உழைச்ச காசெல்லாம்
பத்திரமா நீ முடிஞ்ச
பைய என் படிப்புக்கு
ஆகுமுனு......

அந்திசாயயில வேலைமுடிச்சு
அசதியா தான் வருவ
இருந்தும் உட்கார தோனல
ஓய்வெடுக்க மனமில்ல....

பிள்ளை நான்
பட்டினியா கிடக்கிறேனு
பரிதவிச்சு
 உலை வைப்ப......

அரிசி சோறா ஆகுமுன்னே
கொல்லைத் தோட்டத்தில
கத்தரிக்காய் நாலுபறிச்சு
கணக்கா காய் சமைப்ப.....

வளர்ர பையன் நீ வலுவா
சாப்பிடனும்னு முழுச்சோறும்
எனக்கு வைச்சு - அதில்
பாசத்தையும் பிணைஞ்சு வைப்ப.....

காசோறு மீதிவைப்பேன் - வைச்ச
சோத்திலயும் தண்ணி ஊத்தி
காலைக்கு எனக்கு வைப்ப - வடிச்ச
தண்ணியத் தான் நீ குடிப்ப.....

பெத்தவளே உனக்கீடு
யாருமில்ல - வையத்து
சாமிகூட  உன்போல
இருந்ததில்லை......

எழுதியவர் : முகில் (14-Oct-18, 7:38 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 543

மேலே