ஓய்வின் நகைச்சுவை 22 சந்தேகம் உள்ளே சந்தோஷம் வெளியே

ஓய்வின் நகைச்சுவை: 22 "சந்தேகம் உள்ளே சந்தோஷம் வெளியே"

லக்ஷ்மி: எதுனாலும் அழாம சொல்லு…….
(சந்தேகம், அழுகை, பெண் சாபம் எண்: 21 )

சாந்தி: (கணவன் கேட்கும் படி) இல்லைடி நேற்று ஒரு வ்ரோங் கால் வந்தது.
இவரு போன வைக்கிறப்போ உன் வாய்ஸ் ரெம்ப ஸ்வீட்டா இருக்குனு சொன்னாருடி!!

.லக்ஷ்மி: (ஸ்பீக்கர், ஸ்பீக்கர்) ரெம்ப அசால்ட்டா இருக்காதடி .இதுதான் சர்ட்டிங் பாயிண்ட். . இப்போவெல்லாம் 60-65 ரெம்ப துணிச்சலான வயசடி. நாமதான் ஜாக்கரதையா இருக்கோணும்

கணவன் (கேட்டுக்கொண்டிருந்த) : கர்மம் கர்மம் கண்ட கண்ட சீரியல் பார்க்க வேண்டியது குட்டையை குழப்ப வேண்டியது. கடவுளே . குட்டிப்பொண்ணு தாத்தானு சொல்லிச்சு அதுதான் வாய்ஸ் ஸ்வீட்னு சொன்னேன் என்கிட்ட கேட்க வேண்டியதுதானே
(ஏங்க இந்த சந்தேகம்? ..............நாளை)

(பி.கு) சந்தேகம் வந்துவிட்டால் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அந்த நபரிடம் நேரிடையாக கேட்பது சிறந்தது சம்பந்தமில்லா நபரிடம் சொல்லும்போது அது கிசு கிசுவாக மாறி பெரும் பாதிப்பினை விளைவிக்கும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (17-Oct-18, 6:40 am)
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே