மாதிரி தேர்வு

தேர்வு தேர்வு ‌
வந்தது மாதிரி தேர்வு!

இரவும் விழித்தோம்
அதிகாலையும் எழுந்தோம்
படி படி என்று படித்தோம்!

ஒரு வழியாய் தேர்வையும் முடித்து விட்டோம்.
மழை துளி துளியாய் ....

காகிதங்களை வாங்கி வாங்கி எழுதிய எங்கள் கடமையை கண்ட கார்மேகங்கள்மோதி வந்த ஆனந்த துளிகளோ?

தெரிந்ததை மட்டும் தெளிவாக எழுதிய எங்களை நோக்கிய புன்னகை துளிகளோ?

தெரிந்ததையும் தெரியாததையும் குழப்பி வைத்து கணித குருவை கிறுக்குப் பிடிக்க வைக்கும் கல்லூரி கனவான்களை கண்டு சிரித்து சிரித்து சிதறிய சிரிப்பு திவலைகளோ?

தேர்வு துவங்கியது முதல் கடைமணித்துளி வரை எழுதிய கணிதமாணவிகளை கண்டு தெளித்த தங்கத் துளிகளோ?

புத்தகத்தையே தொடாமல் 3 மணிநேரம் மும்மரமாய் எழுதிய மாணவியைக் கண்டு முச்சுதிணறிய திவலைகளோ?

எல்லாம் படித்து ஒரு மணிநேரத்தில் தேர்வை முடித்து அமைதியாய் சரிபார்த்து கொண்டுடிருந்த தங்க மாணவி மேல் தூவ சிதறிய வைரத்துளிகளோ?

இல்லை

இரு தாள்களை மட்டும் நிரப்பி விட்டு 2 மணிநேரம் தூங்கியதைக் கண்டு கதறிய கண்ணீர் துளிகளோ?

எழுதியவர் : Hums (18-Oct-18, 1:28 pm)
Tanglish : maathiri thervu
பார்வை : 682

மேலே