மனைவியெனும் தேவதை

மனைவியெனும் தேவதை

ஆடிப் பாடி
குதித்து களித்து
கருமயிர் காலங்களில்
களியாட்டங்கள் பல
போட்டப்பின்னும்
கலையாமலிருக்கிறது
உன் காதல்.....
கேசமெல்லாம்
வெள்ளிமுலாம்
பூசிய பின்னும்
வெண்தேகம் சுருங்கி
முதுமை தீண்டிய பின்னும்
இதுவரை சொன்னதில்லை
இனியும் சொல்லாமல்
விடுவதில்லை - தேவதையே
நான் உன்னைக் காதலிக்கிறேன்

எழுதியவர் : முகில் (25-Oct-18, 7:08 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 573

மேலே