மாற்றம் ஏன் கசாப்புக் கடையில்
கசாப்புக்கடை மூடப்பட்டு
காப்பகமாக மாறியிருந்தது- ஆடுகளுக்கு
கண்டவர்கள் பேசிக் கொண்டனர்
கசாப்புக் கடைக்காரனின்
கனவில் தோன்றிய ஆடு
கழுதறுந்த நிலையில் உன்
கடையில் தொங்கும் நான்
கண்டு தொழுதேன் இறைவனை
கடவுள் வரம் கொடுத்தார்- உன்
கடையில் உன் பேரனாக நான் நிற்க
கழுத்தறுந்து தொங்குவாய் என் பேரனான நீ
கனவு கலைந்த அவன் எடுத்த முடிவே கடை மாற்றம்.