கைம்பெண்

பாப்பாவுக்கும் பொட்டு உண்டு./
பாப்பா வைத்துள்ள பொம்மைக்கும்
பொட்டு உண்டு./
தாப்பா போட்ட அறையினுள்ளே
இருக்கும் பாட்டி படத்துக்கும்
பொட்டு உண்டு./

இவைகளுக்கு பார்த்துப் பார்த்து
பொட்டு வைக்கும் அவள் நெற்றிக்கு
என்ன ? உண்டு./
தொட்டு வைக்க விபூதிக்கு மட்டும்
அனுமதி உண்டு./

கல்லான சிலையும் பட்டுத்
துணி கட்ட./
அசையாத நாற்காளிக்கும்
பட்டு மெத்தைபோட./
ஆடும் ஊஞ்சலுக்கும் பட்டுத்
துணி விரிப்பாக./
அவளுக்காக காத்திருக்கு /
அடிக்கிய படியே வெள்ளைத் துணிகட்டிக்க/

பூ பறிக்க அனுமதி உண்டு /
பூச்சரம் கட்ட அனுமதி உண்டு./
பூவாலே பூஜிக்க அனுமதி உண்டு./
பூத உடலுக்கும் பூத்தூவ அனுமதி உண்டு/
அவள் சூடிக் கொள்ள மட்டும் தடை என்றும்/

தவறாது அவள் உசுப்புகின்றாள்.
கண்ணீர்ப் பூவை./
தினம் தோறும் அணைக்கிறாள்
தலையணையை
வலியோடு சிரிக்கிறாள் /
வெளியுலகுக்கு மறைக்கிறாள் /

2013. எழுதியவை சிறு மாற்றத்தோடு

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Oct-18, 5:40 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 102

மேலே