ஆணவத்தின் பரிசு வீழ்ச்சி

சூரியனை தொட்டுவிட
பல நிறங்கள் சேர்த்து வானவில் பாலமொன்று சிந்தனையால் செய்தே
ஏறினேன்.
ஓரடி ஏறும் முன்னே இரடி சறுக்கல் கொள்ள அகலக்கால் வைக்கலாமோ?
வானவில் அழகு தான் கண்ணை பறிக்குதே!
மனமும் அதிலே மயங்குதே!
சூரியனைத் தொடும் நோக்கத்தையும் மறந்தே தவிக்குதே!

அடேய்! பாழாய் மனமே!
உன் சிந்தனைக் கற்பனையில் நீயும் மயங்கி நிலை தடுமாறுவது அறியாமையடா என்று உபதேச மந்திரமோதிக் கொண்டே எட்டெடுத்து வைத்தேன்.
பாதியைக் கடந்துவிட்டேன்.
திரும்பி கிழே பார்த்தேன்.
சற்று பயமானாலும் கர்வமும் சேர தொடங்கியது.

மேலே பார்த்தேன்.
அதோ! சூரியனை நெருங்கிவிட்டேன்.
மேலும் மேலும் மேலே செல்ல, கர்வம் தலைக்கேறி தலைகால் புரியாது, சூரியனையே நெருங்கிவிட்டேன்.
எவரும் அடையாத ஞானத்தின் பூரணத்துவம் அடைப்போகிறேன் என்ற ஆணவத்தில் சூரியனை நெருங்கியே கையால் தொட நீட்டினேன்.
சூரியன் எட்டாத தூரம் போனதாய் தோன்றியது.
வானவில் பாலம் மேல்முனை என் தலைக்கனத்தால் பாரம் தாங்காமல் வளைந்து தரையில் கொண்டுவந்து தள்ளியது.
எங்கே ஆரம்பித்தேனோ அங்கேயே வீழ்ந்துக்கிடக்கிறேன் நானென்ற ஆணவம் தலைக்கேறியதாலே.
தான் உயரக் கர்வம் வளர்ந்தால் தானும் தரையிலே வீழும் என்றொரு குரல் ஒலிக்கிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Oct-18, 11:30 pm)
பார்வை : 1699

மேலே