தொல்காப்பியனுக்கு வெண்பா

தொல்காப் பியனுக்கு இன்றைய நற்றமிழில்
சொல்காப் பியர்இல்லை என்றகுறை நீங்கிட
நண்பனே சொல்லில் எழுத்தினில் பாடவந்தேன்
வெண்பா படித்திடுவாய் நீ !

----இருவிகற்ப இன்னிசை வெண்பா


தொல்காப் பியனுக்கு இன்றைய நற்றமிழில்
சொல்காப் பியர்வேண்டி சொற்றமிழ்ச் -- சொல்லினால்
நண்பனே பூங்கணினி நல்எழுத்தில் பாடவந்தேன்
வெண்பா படித்திடுவாய் நீ !

----இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-18, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே