காதல் தோல்வி

கள்ளம் இல்லா உள்ளத்திலே உந்தன் புகைப்படம் !
காதல் இல்லா நெஞ்சத்திலே துக்கம் ஏற்படும் !
தீரும் இந்த நொடிகளில் உந்தன் முகம் பார்த்தேன் !
தேயும் எந்தன் நிலவினில் உன்னை கொண்டு சேர்ப்பேன் !
காதல் என்னும் வார்த்தையில் என் வாழ்க்கை மூழ்கி போகுதே !
வெள்ளை நிலவின் ஒரு பாதி மேகம் தீண்டி போகுதே !
பக்கபக்கமாய் கவிதை எழுதி ...
பறக்கும் பறவை என் பாதை மறந்தேன் !
உன் விழி பார்த்து நான் சுழன்று போனேன் !
உன் மொழி கேட்டு நான் சிதைந்து போனேன் !
கருமேகம் ஒன்று கூடி ...
என் காதல் பிரிவை சிந்து பாட ...
பொழியும் நீரில் கரைகிறேன் ...

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 11:58 am)
சேர்த்தது : Santhakumar
Tanglish : kaadhal tholvi
பார்வை : 426

மேலே