தமிழ் அழகி

உலகமே உறையும் !
அவள் அழகினிலே
இதயம் சிதையும் !
கடல் அலையும்
கண்ணீர் தெளிக்கும்
அவள் பாதச்சுவடுகள் அழிந்தன என்று !
நிலவொளியும்
அவள் நிழலை பார்த்து
நெஞ்சம் உடையுமே !
கதிரொளியும்
அவள் கண்ணை கண்டு
தன்னை வெறுக்குமே !
இவ்வளவு அழகா ?
இந்திரலோகத்தில் ...
மந்திரம் இவளா ?
இல்லை மாணிக்கத்துகளா ...
ஐயம் கொண்டேன்
அவள் அழகினிலே !
நான் திளைத்து நின்றேன்
அவள் நடையினிலே !
அவள் புருவமும்
புவியை வெல்லும் !
ஆண்களின்
நெஞ்சை அள்ளும் !
புத்தரின்
தவத்தை கொல்லும் !
புலவரின்
புத்தியில் செல்லும் !
பாரதி
பாடிய பெண்ணை !
பாரினில்
நானும் கண்டேன் !
அவள் கொண்ட
ஒழுக்கம்
கண்டேன் !
பெண்களின் இலக்கணம்
அவளே
என்றேன் !
தமிழ் அழகி !
தமிழ் அழகி !
அவள்
தமிழில் பேசும் அழகியே !
தமிழ் அழகி !
தமிழ் அழகி !
அவள்
அழகை ஆளும் அரசியே !

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 7:39 pm)
Tanglish : thamizh azhagi
பார்வை : 569

மேலே