முத்துக் குவியல் உன் புன்சிரிப்பு
முத்துக் குவியல் உன் புன்சிரிப்பு
முத்தமிழ்க் குவியல் என் பாடல்
முத்திரைப் பசும்பொன் உன்மேனி
சித்திரைப் பூக்கள் என் கவிதை
முத்துச் சுடர் உன் விழிகள்
சித்திர வானவில் என் வரிகள்
மார்கழிப் பனி பொழியும் காலை நீ
மஞ்சள் நிலாவென சிரிக்கும் கவிஞன் நான்
மல்லிகைப் பந்தலாய் மாலை வருபவளே
மாணிக்கப் புதையலடி உன் காதல் எனக்கு !