வெற்றிவாகை சூட வா

வெற்றிவாகை சூட வா !
இறந்த காலத்தை இன்று நீ நினைத்து
இருக்கும் காலத்தை தொலைத்து விடாதே
என்னத்தை நீ இழந்தாலும்
நல் எண்ணத்தை இழக்காதே
கைகள் முறிந்து போனாலும்
நம்பிக்கையை விட்டுடாதே
தன்னம்பிக்கையோடு போராடு
உனக்கேது எல்லைக்கோடு? (
ஓயும்வரை பறப்பதற்கு
வாழும்வரை விரிப்பதற்கு
மிகப்பரந்த வானம் உனக்கிருக்கு
உன் சக்தி வாய்ந்த மனச்சிறகை
இன்னும் விரிக்காமல் இருப்பது எதற்கு?
துணிந்து வாடா - எழுந்திடலாம்
எட்டிவைத்தால் - கடந்திடலாம்
முயன்று பாரு முன்னேறலாம்
முடியாதென்றால் நீ ஜடம்தான்! (
பகுத்து அறியும் போது
பல உண்மை வெளியில் வரும்
ஒளிக்கீற்று பிறந்துவிட்டால்
இருள் விலகி ஓடும்
விழித்து எழுந்து நின்றால்
துன்பம் பயந்து சாகும்
உன் இலக்கை நோக்கிதான்
தினமும் நீ நகர்ந்தால்
வெற்றி உச்சிக் கொம்பில்
உனது கொடி பறக்கும்
தலை சிறந்த எடுத்துக்காட்டாய்
வரலாற்றில் உன் பேர் இருக்கும்
ஆதலால் விரந்து நீயும்
விழித்து எழுந்து வந்து
உன்னெதிர் காலத்தை
சரியாய் பயன்படுத்து...!
இவண்
தன்னம்பிக்கை தணல்
கிச்சாபாரதி