கல்லறையில் ரோஜா

அன்று ஒரு நாள் ரோஜா மலருடன்
உனைப் பார்க்க வந்தேன்
மலர் உனக்கு உகந்ததில்லையென
உதாசீனம் செய்தாய்
பல்கலைக் கழகத்தில் நான் பட்டம்
வாங்கியதே உனை பக்கத்தில் பார்த்துத்தானே
வழியில்லாமல் வருத்தத்துடன் விடை பெற்றேன்
என் தேவதையை வாழ்வில் தொலைத்தேன்
காலங்கள் கடந்தன.....
அன்று நான் கொடுத்த மலரை மறுத்தவள்
இன்று மலர் வளையத்தோடு என் கல்லறை
பக்கத்தில் உக்கார்ந்திருக்கிறாள்...