தேவதைகள்

பேருந்தில் பயணம்
கிராமத்து தேவதைகள்
பாவாடை தாவணியில் இருந்து
கொஞ்சமாக கொஞ்சமாக
சுரிதார்க்கு மாறினாலும்
ஆடவர்க்கு அருகில்
அமர்வதில் இன்னும் தயக்கம்
தன் துப்பட்டாவிற்குள்
வெட்க புதையலை புதைத்து
கடைவிழியால் காட்டி
கடைபிடிக்கிறார்கள் கலாச்சாரத்தை!!!!!