கஜா

கஜா!!

கஜா!!
டெல்டா விவசாயிகளின்
நிரந்தர கண்ணீருக்கு சொந்தக்காரன்!

கஜாவின் கோர தாண்டவத்தால்
ஊருக்கே படி அளந்த கைகள்
இன்று பல பேரிடம் கையேந்தும் நிலைமை!

பொங்கல் இட்டு இயற்கையாக வணங்கினோம் உன்னை
வேறென்ன பாவம் செய்தோம்
இப்படி காயப்படுத்திவிட்டாயே!

கண்ணீரும் கம்பலையுமாக எம் மக்கள் நடு தெருவில் அவதிபடுகிறார்கள்
கஜா! உனக்கு திருப்தியா!
படுபாவியே எங்கிருந்து வந்தாய்
யார் அனுப்பி வைத்தது உன்னை
அப்படி என்ன கோபம் என் மக்கள் மீது.

மனித நேயம் மாய்ந்து விடவில்லை
மனிதனின் ஆக சிறந்த குணமே மனிதநேயம்

இயற்கை மனிதனை பார்த்து சவால் விட்டுள்ளது
மனிதன் இயற்கையை பார்த்து சவால் விடும் நேரமிது!!

கஜா!!
ஒரே சமயத்தில்
பல லட்சம் தொடைகள் தட்டி கூறுகிறோம்
இனைந்த கைகளாய்
பாடுபடுவோம்
ஒன்று கூடுவோம்
மீண்டும் உயர்ந்திடுவோம்
இது உறுதி !!

மானமுள்ள
தமிழன் என்றுமே தாழ்ந்திட மாட்டான்
சிரம் தாழ்ந்திட மாட்டான்
விரைவில்
சிறுத்தை என சீறி பாய்வான்
சிங்மென கம்பீரமாக நடப்பான்
அனைவருக்கும் அள்ளி, அள்ளி கொடுப்பான்
தமிழன் வீழமாட்டான்
வாழ்வான், வாழவைப்பான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (22-Nov-18, 9:30 am)
சேர்த்தது : balu
பார்வை : 104

மேலே