அ முதல் ஃ வரை

அறிவில் சிறந்த ஆயுதமில்லை
ஆற்றல் என்றும் அனைத்துக்கும் முதன்மை
இனிப்பால் பல இன்னல்கள் உண்டு
ஈகை ஒரு நாள் சோகம் தீர்க்கும்
உண்பதை குறைத்தால் உபாதை குறையும்
ஊனை காத்தால் உற்சாகமாய் வாழலாம்
எளிமை பேச்சு ஏற்றத்திற்கு வழி
ஏரால் தானே பாருக்கு பெருமை
ஐம்புலன் காப்பு ஆரோக்கியத்தின் ஊற்று
ஒவ்வொரு நொடியும் உனக்கென உணர்
ஓங்கி வளர்ந்தாலும் உண்மையுடன் வாழ்
ஒளடதத்தை எப்போதும் அளவோடு எடு
ஃ என்பது அகக்கண்ணின் அம்சம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Nov-18, 5:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 138

மேலே