எல்லாம் அறிந்தவர்

பொறுப்பவர் முதுகில்
புறம் பேசுவோர் பயணிப்பர்
எதிர்ப்போர் எல்லாம்
அரசுக்கு எதிரி
எல்லாம் அறிந்தவர்
எவற்றையும் வெறுப்பார்
காசின் குவியல்
கடமையை மறுக்கும்
பாசப்போர்வை
பலவீனமாக்கும்
தேசம் ஆள்வோருக்கு
திடமனம் வேண்டும்
நேசம் கொண்டாலும்
சுகம் துக்கம் விலகா
பதவி என்பது - நம்மை
பலசாலி ஆக்க
சேவை என்பது
சமத்துவம் பெருக.

- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Nov-18, 4:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 94

மேலே