சத்தியமாய் இது காதல் இல்லை

சத்தியமாய் இது காதல் இல்லை . . .
பார்வைகள் ஊட்டி ஊட்டி
பசியை பறந்தோட செய்வதும்
யாரேனும் பார்ப்பார்கள்
எனும் தயக்கமின்றி
தோள் மீது சாய்வதும்
கை சேர்த்து நடந்தினும்
காமமின்றி கடப்பதும்
உடல் ஆசை ஏதுமின்றி
அன்போடு வாழ்வதும்
தேவைகள் இதுவென்று
தேர்ந்தெடுத்து கொடுப்பதும்
தாய் தந்தை உடன் பிறப்பு என
யாரிடமும் சொல்லாததை
தயக்கமின்றி சொல்வதும்
சின்ன சின்ன சண்டைகளால்
சில நாட்கள் பிரிவதும்
ஏன் பிரிய வேண்டுமென
சட்டென சேர்வதும்
பல கதைகள் தினம் பேசி
புன்னகையில் மூழ்குவதும்
தோள் மீது சாய்ந்த படி
மன பாரத்தை இறக்குவதும்
நீ சமைத்த உணவை ஊட்டி
தாயாக மாறுவதும்
சிக்கனமாய் இரு என
அடிக்கடி திட்டுவதும்
அறிவுரை சொல்லி சொல்லி
அலுத்து போய் நிற்பதும்
ஊக்கத்தை ஊட்டி ஊட்டி
எனை சாதிக்க தூண்டுவதும்
அடிக்கடி கடன் கொடுத்து
இதுதான் கடைசி என்பதும்
மீண்டும் கேட்க வந்தால்
அப்பொழுதும் கொடுத்து விட்டு
இதுதான் கடைசி என்பதும்
ஒரு நாளும் தவறாமல்
உரையாடி மகிழ்வதும்
நெடுந்தூரம் பிரிந்து போனால்
சத்தமின்றி அழுவதும்
ஏழு ஜென்மம் இப்படியே
இருந்து விட நினைப்பதும்
நான் உனக்காய் வேண்டுவதும்
நீ எனக்காய் வேண்டுவதும்
வாழும் நாள் எல்லாம்
நிரந்தமாய் நிலைக்குமோ
என்றே ஏங்குகிறேன்
தினம் தினம்
என் தோழியே
பின்குறிப்பு :
இதை படித்து கொண்டிருப்பவர்களுக்கு
சத்தியமாய் இது காதல் இல்லை . . .
நட்பை விட காதல் அவ்வளவு பெரியதா என்ன ????