திறமை வளர்த்திடு

திறமை வளர்த்திடு.
உலகை ஜெயித்திடு .
உந்தன் பெயரை நிலைநாட்டிடு .
கவலை மறந்திடு .
கண்ணீர் துடைத்திடு .
கனவை நீயும் நினைவாக்கிடு .
காலம் உந்தன் பெயரை சொல்ல கனவு கொண்டு நடைபோடு .
வருங்காலம் உன்னை நினைவில் கொள்ள திறமை கொண்டு நீ விளையாடு .
யாரும் இல்லை உன்னை வெல்ல !
யாரும் இல்லை உன்னை வெல்ல !

நிலையாய் நில்லு வெற்றி கொள்ள .


வானம் போல வாழ்க்கை நம்மை கொளுத்திடும் , நினைத்திடும் , துயரில் வழி நடத்திடும் .

காற்று போல் திறமை நம்மை உசிப்பிடும் , உயர்ந்திடும் , உயர உயர உயர்த்திடும் .

கனவுக்கோர் சிறகை கொடுத்து அகிலம் திரிய செய்திடுமே .

வலிகள் பொறுத்துக்கொண்டே வழிகள் வகுத்து தந்திடுமே .

விழிகள் விழித்துக் கொண்டே வெற்றி காண துடிக்குமே .

நாட்கள் நகர்ந்துச்சென்றே நாளை உனக்காய் விடியுமே .

எழுதியவர் : M. Santhakumar . (1-Dec-18, 4:27 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 568

மேலே