உன்னால் மட்டுமே முடிந்தது
என்னை முதல்
பார்வையிலேயே
ஈர்க்க
அழகாய் என்னை
ரசிக்க
அன்போடு எனை
நேசிக்க
எனக்காக காத்திருக்க
என்னைப் பற்றி
தெரிந்துக்கொள்ள
என் தேவைகள்
புரிந்துக்கொள்ள
என் கோபங்களை
தாங்கிக்கொள்ள
என்னையே எடுத்துக்க
என்று
சொல்ல வைக்க கூட
உன்னால் மட்டுமே
முடிந்தது என்று
சொல்லும் என்னால்
என்னை அழவைக்கவும்
முடியும்
என்பதை தான்
நம்ப முடியாது
இருக்கின்றது!