செருப்பு
செருப்பு,
இது நம்முடைய உறுப்பு
இதற்கு இல்லை மறுப்பு .
காலுக்கு மெத்தையாகிய செருப்பு,
நாமெல்லாம் கற்களுக்கும், முட்களுக்கும்
நன்றி சொல்ல வைத்த மாபெரும் இருப்பு
நீ இருப்பாய் ஜோடியாக
இது எனக்கு தோன்றும்,
இல்லறத்தின் முகமூடியாக!!
ஜோடி பிரிந்தால் மதிப்பில்லை
செருப்புக்கே இந்த கதி
எனவே மனிதா உலகம் -அறிவின் ஊற்று
இயற்கை வழி கற்பிக்கும் தென்றல் காற்று
இதை புரிந்துகொண்டு வாழ்க்கையை மாற்று!!!!