உயிரே
ஓசை இல்லாமலே
காதல் ஆசை பிறந்தது .
அது உன் மேலே சத்தம்
இல்லாமல் மலர்ந்தது...!
நீ நகர்ந்தாய்
பாசம் இல்லாமல்
அது தெருவிலே விழுந்தது...!
அன்று முதல் துக்கமது
முளையிட்டது
அவை வேர் விட்டு
இன்றும் நிலைக்கின்றது ..!
கண்ணில் கிறுக்கிய
உன் உருவம் கண்
கலங்கியும் அழியவில்லை ...!
நெஞ்சில் பதியம் இட்ட
உன் பெயர் குருதி வற்றிய
பின்னும் கிளையிட்டுக்
கொண்டே இருக்கு
இன்று வரை வாடவில்லை ...!
தொலை தூரத்து உறவாக நீ
தொலைந்து விட்ட நிலவாக நான்.
சுட்டெரிக்கும் தீயாக நீ -அதை
தொட்டு இறக்கும் விட்டில் பூச்சாக நான் ..!
உன் அன்பு என்னை தாங்குமோ?
உன் பாசம் என்னை நோக்குமோ ?
இல்லை காத்திரிப்பு வீன் தானோ ?
கவலைச் சிறை தான் சொந்தமோ ?
சொல்லி விடு விரைந்து என்
அன்பைக் கொள்ளையிட்ட உயிரே .!