வெண்மேகத்தின் விண்மீனே

மஞ்சளாய் பூத்த அஞ்சுகமே
நெஞ்சிலே துளிர் விட்ட சஞ்சிவியே
வெண்ணெய்யில் வார்த்தெடுத்த
வெண்மேகத்தின் விண்மீனே
வாரத்தின் நாள் ஏழிலும்
எழிலாய் எனை நோக்கி
எப்போதும் ஆவலைத் தூண்டும்
ஏகாந்த செங்காந்தலே
எந்நாளில் வருவாயோ எனை சேர
அன்றிலைப் போல் ஆசையோடே காத்திருக்கேன்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (7-Dec-18, 8:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 317

மேலே