அதை செய்ய முடியாது, ஆனால் முடியும்

யாரோ ஒருவர் சொன்னார், " அதை செய்ய முடியாது. ",என்று.
ஆனால் அந்த மனிதர் உள்ளூர சிரிப்போடு பதில் தந்தார், " அதை செய்ய முடியாமல் போகலாம். ",என்று.
ஆனால் அவர் முயற்சித்துக் கொண்டிருக்கும் வரை அப்படி சொன்னதில்லை.
ஆனால் அவர் முகத்தில் தென்படுகிறது பணிவான சிரிப்பின் சுவடு.

அவர் கவலைப்பட்டாலும் அதை மறையச் செய்துவிடுகிறார்.
அவர் பாடத் தொடங்கியதும்,
செய்ய முடியாததும்,
செய்ய முடிந்ததும் பற்றிய கவலை தணிய தொடங்குகிறது.

சிலர் ஏளனம் செய்தார்கள், " ஓ! ஏழை மனிதா! நீ அதை செய்து முடிக்க மாட்டாய். அது யாராலும் செய்ய முடியாதது. ",என்று.
ஆனால் எடுத்து அணிந்து கொண்டார் தன் மேலங்கியை.
தனது குல்லாவை அணிந்து கொண்டார் தன் தலையில்.
அந்த செயல் அவர் தனது வேலையைத் தொடங்கிவிட்டார் என்பதைச் சொல்லும் அத்தாட்சி.

தனது மேவாயை அசைத்து சிறிதும் சந்தேகமின்றி சிரிப்பின் துளிகளை வீசி அவர் பாடத் தொடங்கியதும்
செய்ய முடியாததும், செய்ய முடிந்ததும் பற்றிய கவலை தணியத் தொடங்குகிறது.

அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர், " இதை செய்ய முடியாது. ", என்று உங்களிடம் சொல்ல.
அங்கு ஆயிரக்கணக்கான தோல்விகள் உள்ளன தீர்க்கத்தரிசிகளின் வாழ்வில்.
அங்கு ஆயிரக்கணக்கான குறிப்புகள் உள்ளன ஒவ்வொன்றாக நீங்கள் குறித்து வைத்துக் கொள்ள.

உங்களைத் தாக்குவதற்காகக் காத்திருக்கின்றன ஆபத்துகள்.
ஆனால், பணிவான சிறு புன்னகையோடு உங்கள் மேலங்கியை எடுத்து அணிந்து கொண்டு,
அதை நோக்கிச் செல்லுங்கள்.
உங்களால் முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றிய கவலை தணியப் பாடிக் கொண்டே உற்சாகமாகச் செயலாற்றுங்கள்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Dec-18, 12:53 am)
பார்வை : 1874

மேலே