அழகியடி

உன் கார் கூந்தல் போர்வை அல்லவா
என் மார்போடு போர்த்தி கொள்ளவா
விங்ஞான கவிதையே
தொடங்கும் கண்ணில் இருந்து
தொங்கும் கொலுசுகளின் பதம் வரை
இரண்டடி வெண்பாவாய் உன்னை
படைத்ததென்ன காவியமே
மின்னும் உதட்டின் ஒளிதனிலே
மங்கி போனதென்ன என் விழிகள்
வேகமாய் நீ சுழற்றும் நா தனிலே
வேகமும் குறைந்து போனதடி என் இதயம்
உன் நெஞ்சின் மையம் என்னடி புதைகுழி
சிறு மீனை விழுந்து நீந்த ஆசையடி
சிணுங்கும் இடை ஓரம் சுற்றி இருக்கும்
கயிறாய் உயிரை திரித்து ஒட்டிக்கொள்ளவா
அழகே உலகலே என்னடி பிரமிப்பு இது
பிரமித்தே படைத்தானோ பிரம்மனும்

எழுதியவர் : ராஜேஷ் (12-Dec-18, 7:40 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 3237

மேலே