விழியினுள்ளே ஓர் ....


இமைகள் மூட மறுத்த

ஓர் பின்னிரவில்

சன்னல் கிராதியினூடே

தெரிந்த வான்விரிப்பு ,

நிச்சலனமாய்,

ஏகாந்தமாய் ,

முடிவற்ற பரப்பாய்,

எண்ணத்தைச் சிறிது நேரம்

உலவ எடுத்துச் சென்று

திரும்ப விட்ட நேரம்

தெரியாமல் இமைகள் மூட,

விழிகளுக்குள்ளேயும்

முடிவற்ற பரப்பாய்

மெல்லிய இருள் சூழ்ந்த வானம்!!!!!!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (25-Aug-11, 9:40 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 362

மேலே