வாடி கை கொடடி என் காதல் கண்ணம்மா
வேடிக்கை மனிதர்களைப் போல்
காதலில் விழுந்தேன் என்று நினைத்தாயோ
நமது காதல் தெய்வீக காதலடி
வாடிக்கை மறந்திடலாமோ
வாடி கை கொடடி என் காதல் கண்ணம்மா !
மோடியா ராகுலா என்பதெல்லாம்
வடக்கத்திய அரசியலடி
திருவாரூரில் தேரா தேர்தலா
வடக்கத்திய கமலா தெற்கத்திய கமலா
என்ற வீண் பேச்செல்லாம் நமக்கு ஏதுக்கடி
வாடி கை கொடடி என் காதல் கண்ணம்மா !
மண்டபமோ மலைக்கோயிலோ மணிக்குயிலே
தையில் தாலியுடன் வருவேனடி
ஹனிமூன் ஊட்டியில் தானடி இது நிச்சயமடி
BE READY !
வாடிக்கை மறந்திடாதே
வாடி கை கொடடி என் காதல் கண்ணம்மா !