போதும் போதும் பொங்கல் இனாம்

போதும் போதும் பொங்கல் இனாம்
பணமாய் கொடுத்து மக்களை
பிணமாய் மாற்றும் நிலையே வேண்டாம்
சுயமாய் உழைத்து உண்மையாய் உண்ண
உன்னத தொழிலை உருவாக்கிக் கொடுத்தால்
உங்களை தங்கள் இல்லங்கள் தோறும் - தெய்வ
சக்தியாய் போற்றும் சமயமும் வரும்
ஆண்டு தோறும் கொடுக்கும் அரசு இனாம்
பணத்தால் ஆளரவமற்ற அரசு நிலத்தை
அழகாய் திருத்தி அதில் காடமைத்து
பெருமழை பெய்ய செய்தால் பெரிய கஷ்டம் தீரும்
பெருத்த நீரினால் சிறந்த விளைச்சல் தோன்றும்
நிறைந்த செல்வம் பெருகி அருந்தவ வாழ்க்கை மாறும்
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Jan-19, 10:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 104

மேலே