வந்த மச்சான்

உதட்டோரம் மச்சம்
பார்க்க வந்த மச்சான் /
என் மூக்கு
மேல கண்ண வச்சான் /

பச்சைக் கல் மூக்குத்தி
எடுப்பாய் இருக்கும்
போட்டுக்கோ என்று
சொல்லி வச்சான் /

மூச்சோடு மோகத்தை
மூட்டிச் சென்றான் /
மூச்சுக்கு முன்நூறு தடவை
அவன் பேச்சையே
பேச வச்சு சென்றான் /

கண் சிமிட்டி டா டா
காட்டிச் சென்றான் /
கன்னிப் பொண்ணு என்
நெஞ்சுக்குள்ளே கலவரத்தை
நுழைய விட்டுப் பூட்டிச் சென்றான் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (9-Jan-19, 5:18 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vantha machan
பார்வை : 67

மேலே