காதல்
முத்தம்மா, முத்தம்மா என்று அழைத்தேன்
முத்தமா கேட்கிறாய் மாமா இதோ
வந்துவிட்டேன் தந்துவிட்டேன் என்று கூறியவள்
என்னை வந்தடைந்தாள் என்னைக் கட்டி அணைத்து
முகமெல்லாம் முத்துமாரி பொழிந்தாள்
என்னவள் , என் அத்தைமகள் தந்த முத்தமழை
என்னைத் திக்கு முக்காட செய்ததுவே
அந்த முத்தமாம் காதல் மழை.