மேதைகள்
உழைப்போரும்
உழவர்களும்
நாட்டை மேம்படுத்தும்
'மேதை'கள்
உழைப்போரின் திருநாள்
மே
உழவர்களின் திருநாள்
தை
விதைத்து பலன் தருகிறான்
உழவன்
உழைத்து பலன் தருகிறான்
உழைப்பவன்
வியர்வை சிந்தி
உயர்வைக் கூட்டுகிற மேதைகள்
உழன்று சிந்தும் கண்ணீர்
மண் மீது விழலாமோ?
உழைப்புக்கேற்ற ஊதியம் உழைப்போருக்கு
விலை நிர்ணய உரிமை விவசாயிக்கு
பேரம் தவிர்த்து அவர்தம் பாரம் குறைத்து
மேதைகளை செழிப்பாக்குவோம்
நாட்டை வளமாக்குவோம்