கடவுள் ஓய்வெடுக்கின்றார்

ஸ்ஸ்ஸ்......
சப்தம் போடதீர்!

சலனத்தில் விழித்தால்....
சட்டென்று உலக அச்சு மாறலாம்...
சடுதியில் காற்றின் மொழி கூடலாம்...

ஸ்ஸ்ஸ்......
சப்தம் போடதீர்!

காலை விடிந்தவுடன்
ஏழை பிணி போகலாம்!
தேவை மீறி
தேங்கி உணவு தெவிட்டலாம்!!

மாலை மலர்ந்ததும்
மழை தேவதை பொழியலாம்!
வேளை வந்ததென
வெள்ளாமை செழிக்கலாம்...

காலம் காலமாய்
கரைந்துப் போய் ....
ஞானம் திரிந்து
நினைவுகள் அழிந்தாலும்...


ஸ்ஸ்ஸ்......
சப்தம் போடதீர்!
கடவுள் ஓய்வெடுக்கின்றார்!

எழுதியவர் : ஆழிசரன் (31-Jan-19, 12:31 am)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 591

மேலே