உயிரை மாய்த்துக் கொள்ளும்
3 மாதம் மட்டுமே உடுத்தும் துணியை
300 தடவை பார்க்கும் பெண்ணே
5 ஆண்டுகள் ஆளும் நம்மை
500க்கு ஆசைப்பட்டு 5 நொடி நேரத்திலேயே
பொத்தானில் வாக்கை செலுத்தும்
பொது அறிவு அற்ற நம்மால்
போட்டியில் வெற்றி பெற்று
பொது வாழ்க்கையில் ஈடுபடும்
பொது நலம் அற்ற பேரால் - என்றும்
புது வாழ்வு பூப்பதும் இல்லை
கிடைத்த வாழ்வு செழிப்பதும் இல்லை.
ஒரு ஆண்டில் தேர்வில் தோற்றால்
உயிரை மாய்த்துக் கொள்ளும்
பிள்ளைகள் உள்ள நாட்டில்
ஐந்தாண்டுகள் வீணாவதைக் கண்டு
அரை விழுக்காட்டு அளவுக்கூட
ஐயம் கொள்வதே இல்லை
இதுவரை கடந்தது போதும்
இந்நிலையை இனிமேல் மாற்றி
இயங்குகிற ஆட்களை தேர்ந்தெடுத்து
இந்தியாவை நிமிரச் செய்வோம்.
__ நன்னாடன்