யாரோ
யாரோ அந்த யாரோ
நிலையை சரி செய்பவர் யாரோ
இந்த கணங்களை மாற்றுபவர் யாரோ
இந்த காலம் மாற்றம் செய்பவர் யாரோ
எல்லாம் சரியென செய்பவர் யாரோ
நன்மையை விதைப்பவர் யாரோ
செய்து சொல்வாரோ
சொல்லிச் செய்வாரோ
செய்து மறைவரோ
மறைந்து செய்வாரோ
செய்யாமல் சொல்வாரோ
சொல்லி செய்யாமல் போவாரோ
எல்லாம் இப்படியே என்று
மாற்றம் இல்லாமல் செய்வாரோ
அந்த யாரோ யாரோ
தெரியாமல் போவோமா
இல்லை தெரிந்து போவோமா
இல்லை நாம் தான் அந்த யாரோவாக மாறுவோமா
தெரியாமல் அந்த யாருக்கோ காத்து இருப்போமா
எல்லாம் யார் கையிலோ................
அந்த யாரோ யாரோ ?