சிரிப்பு

சிரித்தால் நீ...

சிறுபிள்ளையாவாய்!

பெருஞ் சிரிப்பால் நீ...

பெருமைகாரனாவாய்!

குறுஞ் சிரிப்பால் நீ...

தந்திரகாரனாவாய்!


இயந்திரமயமாதலால்

இறுகிய முகமே

இயல்பாகி போனது!

உன் முகத்தில்

நான் தேடுவதற்கு ஒன்றும் இல்லை

இயந்திரமும் நீயும்....

இணக்கமாய் போனீர்கள்!


இயந்திரத்துக்கு எதற்கு

சிரிப்பு !!!


கடவுளே வரம் கொடு...









சில நொடிகள் சிறுபிள்ளையாக!



எழுதியவர் : ஆழிசரன் (8-Feb-19, 9:02 am)
சேர்த்தது : ஆழிசரன்
Tanglish : sirippu
பார்வை : 93

மேலே