எண்ணிரண்டு பதினாறு

எண்ணிரண்டு பதினாறு
வயதெனுக்கு என்
கண்ணிரண்டும் தூக்கம்
தொலைத்திருக்கு இது
பருவகோளாறு தான்
தெரியுதெனுக்கு
பதினாறுதானே அவசரம்
எதற்கு என்று
கேட்டது விரோதமானது
எனக்கு
கேள்விகள் கேட்பது
பிடிக்காது போனதெதற்கு
இதுவும் புரியாத
புதிராதான் இருக்கு
படித்ததும் பார்த்ததும்
செய்தியாய் மட்டுமிருக்கு
சின்னதாக ஒரு பயம்
மட்டும்
மனசிலிருக்கு ஆனாலும்
எண்ணிரண்டு பதினாறு
முன்
தோற்றுதான் நிற்க்கு!