ஃப்ராய்டுலிஸம்

வார்த்தைகளை கோர்த்து
வசனங்களை மடக்கி
வர்ணங்களை தோய்த்து
வானளாவிய புகழ்ச்சியுடன்
இணைவிழைச்சு பட்டியலிட்டு
இணைய துடிப்பதுபோல்
ஆழ் உணர்வை வெளிப்படுத்தி
ஆரவாராங்களுக்கிடையில் வீறு நடை...
நார்ஸிஸ் தனி ஆவர்த்தனம்
ஓடிபஸ் ஒத்தடங்கள்
ஹெர்குலீஸ் பயணங்கள்...
தட்டச்சே பிரதானமானபோது
முளை மழுங்கிய பேனா முனைகள்
முக்கி முனங்கி மூளையிலே
மூச்சுவிட திணறிக் கொண்டு....
முளையானும் ஃபராய்டுலிசம் நோக்கியே....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (10-Feb-19, 11:34 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 81

மேலே