காதலும் மாங்கனியும்

சேலத்து மாங்கனி
பார்வைக்கும் பேரழகு
சுவைக்கவும் கனியமுது
ஆனால் கனியும் முன்
புளிக்கும் மாங்காய்
காயாகும் முன்னே
அது வெறும் மாவின் பூவே
காதலும் அப்படித்தான்
இருவரின் பார்வை சந்திக்க
ஒரு நேசம் உருவாகும்
அரும்பில் மாவின் பூப்போல்
நேசத்தின் நீடிப்பில் மலரும்
நட்பாய் மாவின் விரிந்த மலராய்
மெல்ல மெல்ல நட்பு காதலாய் மாறும்
இருவர் உள்ளமும் இணையும்போது
திருமணத்தில், காதல் கனியும்
சேலத்து தித்திக்கும் அழகு மாங்கனியாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Feb-19, 7:58 pm)
பார்வை : 61

மேலே