மாசடைந்த மருத்துவம்
மகத்துவம் வாய்ந்த தொழில்
மாளும் நிலையில் உள்ளோரையும்
மண்ணில் நிலைபெறச் செய்வது
மாட்சிமை பெற்றோரின் மனசாட்சியின் ஆட்சியால்
வீழ்ச்சி அடையாமல் எழுச்சி கண்டது.
இன்றோ !
கண் நோவுக்கு கணுக்காலிருந்து கழுத்துவரை
கண்டுபிடிக்கப்பட்ட எல்லா இயந்திர மூலம்
கணக்கில்லா சோதனை (Number of Test)
அரைக் காசில் தீரும் நோயுக்கும்
ஆயிரக்கணக்கில் செலவீனம்
என்று!
இந்நிலை மாறுமோ யாரரிவார்
அஞ்சி வாழுதலை புறந்தள்ளியும்
அருமை உடல்தனை தினம் பேணியும்
நஞ்சு உணவுதனை அறவே நீக்கியும்
மிச்ச வாழ்க்கையை பைய வாழுவோம்.
__ நன்னாடன்